உங்களை அன்புடன் வரவேற்கும் வலது விரல்கள் (RFMC)


அன்புடையீர், வணக்கம். சினிமா துறையின் மீது ஆர்வம் கொண்டு RFMC யில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும். சினிமா ஆர்வமுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து காலத்திற்கேற்ப வெற்றிப் படங்களை தயாரிக்க உத்தேசித்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். இதில் உறுப்பினராகும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் வாய்ப்பளித்து நல்லதொரு வெற்றியை அடையும் இலக்கோடு செயல்பட்டு வருகிறோம். மேலும் RFMC Prime எனும் OTT தளம் மூலம் நமது உறுப்பினர்களின் படைப்புகளுக்கு உரிய வியாபார அங்கீகாரத்தையும் உருவாக்கித் தருகிறோம். அதற்கு உறுப்பினர் கட்டணம் ₹1000/- மட்டுமே! RFMC யில் உறுப்பினராவதன் மூலம் பல்வேறு வாய்ப்புகளைபயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் திரைத்துறை கனவுகளை நனவாக்க இன்றே பதிவு செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.

இங்கே கிளிக் செய்து பதிவிடுங்கள்
👇👇👇
இங்கே கிளிக் செய்க

பணம் செலுத்தும் முறை
👇👇👇
GPay, phone pay number : 8903441383

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
-குறள் 385
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

சரியான முறையில், சரியான வழியில் இயற்றி, ஈட்டி, காத்து வகுக்க வேண்டும். அதை சரியான விரல்களால் மட்டுமே செய்ய முடியும். அதுவே வலிமையான விரல்கள், அதுவே வலது விரல்கள். அதன் மூலமே அறம் பொருள், இன்பம் செழித்தோங்க முடியும். கொடுப்பதும் பெறுவதும் நமது வலது விரல்களே. அவற்றின் தலையாயப் பணி இயற்றலும் ஈட்டலுமே. நமது வலது விரல்கள் அமைப்பின் தலையாயப் பணியும் நிதிசேகரம் செய்வதும் அதன் மூலம் அறப்பணிகள் செய்வதும், கலை, இலக்கியம், கலாச்சாரம் வளர்ப்பதுமேயாகும்.

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே. இது ஊர்கூடி தேர் இழுக்கும் பயணமாகும். சேவையும் பொழுதுபோக்கும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் இரு கண்களாகும். அதை நமது நிதிசேகரப் பங்களிப்புடன் ஆக்கப்பூர்வமான வழிகளில் நேர்மையாக வெளிப்படைத் தன்மையுடன் திரைத்தொழிலிலும் சேவைத்தொழிலிலும் வெற்றிபெறவும், வெற்றிபெறச் செய்யவுமே இந்த அமைப்பு. வாருங்கள்….. கொடுத்துப் பெறுவோம்! கரம் கோர்ப்போம்... வலு சேர்ப்போம்!!

இலக்கு

பொதுசேவையில் மன நிறைவும், பொழுதுபோக்கில் தன்னிறைவும் அடைவதை இலக்காகக் கொண்டு சமூக அக்கறையுடன் நல்ல திரைப்படங்களை தயாரித்தல், திரை ஆர்வலர்களுக்கு வழிகாட்டுதல், விநியோகம் செய்தல், ஓ டி டி (ஓவர் தி டாப் O T T – Over The Top ) தளம் ஆரம்பிப்பது, அதன் மூலம் பெறப்படும் வருவாயில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்கு கொடையளித்தல் போன்ற உயரிய நோக்கோடு பயணித்தல்.

தொலைநோக்கு

பெரும்பான்மை மக்களின் கனவுலகமாகத் திகழும் திரைத்துறையை மக்களின் சிறு சிறு பங்களிப்பாக நிதிசேகரம் மூலம் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி எளிமையான முறையில் அனைவரையும் வலிமையாக்கி சிகரம் தொட வைக்கவேண்டும்.

நிதிசேகரம் (Crowd Funding)

1.சேவை - Charity
2.திரைத்துறை - Media

1. சேவை - Charity

தமிழகம் முழுவதும் உள்ள சேவை அமைப்புகளுக்கு அதைச் சார்ந்த பயனாளிகளுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து போர்க்கால அடிப்படையிலும், நீண்டகாலத் தேவை அடிப்படையிலும் உதவுகிறோம். பொது மக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் மனமுவந்து தாராளமாக தங்களால் இயன்ற உதவிகளை செய்து இறையருள் பெற்று புண்ணியம் சேர்க்க வேண்டுகிறோம். வரிவிலக்கு பெறுவதற்கான 80G, 12A வசதிகள் உண்டு.

அனைத்து சேவை அமைப்புகளும் இதில் இணைந்து பயன்பெறலாம். உங்களுக்கான பொருளுதவி, பண உதவி, சட்ட ஆலோசனை, C S R வழிகாட்டல், உங்கள் சேவைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி சேவை மேம்பட உதவுகிறோம்.

2. திரைத்துறை - Media

நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள எத்தனையோ திறமையான கலைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வழி தெரியாமலும், பல சிறு முதலீட்டாளர்கள் திரைத்துறையில் முதலீடு செய்து இலாபகரமாக பணம் ஈட்ட வழி தெரியாமலும் நேரத்தையும், செல்வத்தையும் வீணாக்குகிறார்கள். அவர்களை அடையாளங்கண்டு ஒருங்கிணைத்து அனைவரும் பயன்பெறும் வகையில் இயங்குவதே இந்த வலது விரல்கள் அமைப்பாகும்.

கலைஞர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற பலன் பல மடங்காக திரும்ப வரும் என்பதற்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம். வாய்ப்பினைத் தேடுவோரும், வாய்ப்பினை உருவாக்குபவர்களும் இதில் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கவும்.

எங்களை பற்றி

அண்ணாதுரை சின்னமுத்து

மின்னியல் மற்றும் மின்னணுவியலில் பட்டயம் பெற்றுள்ள இவர் சிறுவயது முதலே கலை இலக்கியம் மற்றும் பொதுசேவை சார்ந்தே இயங்கிவருகிறார். கலையமுதன் எனும் புனைபெயரில் பல்வேறு இதழ்களில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒரு சிறுகதை தொகுப்பு, மூன்று கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மணிமேகலைப் பிரசுரத்தில் வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பு 2001-ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் திருச்சி, பாண்டிச்சேரி வானொலிகளில் இவரது சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவர் தற்போது சேலம், ஓசூர், சென்னை மற்றும் கோவையில் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறப்புடன் நடத்தி வருகிறார். இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு சேவை செய்த்துள்ளார்.

ராமஜெயம் கருணாகர பாண்டியன்

சோதிடத்தில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றுள்ள இவர் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். சோதிட ஆலோசனை மையம் மற்றும் துணைவன் எனும் ஹோம்கேர் நிறுவனத்தையம் சிறப்பாக நடத்திவருகிறார். மேலும் தமிழ்நாடு நாடார் சங்க மாநில மகளிரணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். முதியோர் நலன், மகளிர் மேம்பாடு, பொதுசேவை என அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் V.இளவரசன்

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர் (எண்:1436) ஆவார். இவர் திரைத்துறையில் உதவி இயக்குனர் மற்றும் இணை இயக்குனராக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். வசந்த வாசல், கிழக்கு வெளுத்தாச்சு, ஆத்தா நான் பாஸாயிட்டேன், இராவணன், சின்னமணி, அதுவேற இதுவேற, அகிலா, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் ரொம்ப வருத்தப் படுவீங்க, பேசுவோமா, ஆடிக்கிருத்திகை, சூப்பர் குடும்பம் போன்ற படங்கள் இவரது இணை இயக்கத்தில் உருவானவைகளாகும். பிரபல இயக்குனர்களான TP. கஜேந்திரன், SP ஜனநாதன், சுந்தர். சி, R K செல்வமணி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது இவரது சிறப்பு. மேலும் மகாராஜன், பேரரசு, திலகராஜன், கலைமணி, சுந்தர்.சி, ஆகியோரிடம் கதை விவாதங்களில் பணிபுரிந்துள்ளார். என்பது குறிப்பிடதக்கது. சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.

நித்தின் அண்ணாதுரை

சமையல் கலையில் பட்டயமும், திரைப்பட ஒளிப்பதிவாளர் (அரசு MGR திரைப்படக் கல்லூரி தரமணி.) படிப்பில் பட்டமும் பெற்றுள்ளார். கற்பனைத்திறனும், புதிய சிந்தனைகளை வெற்றிகரமாக செயல்படுத்தும் திறனும் கொண்ட இவர் இவரது கல்லூரி மூத்த மாணவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் திரைப்படத்திலும், உதவி ஒளிப்பதிவாளராகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அமேசான் பிரைம் OTT க்காக ஒரு வலைத்தொடரில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

அபிராம் அண்ணாதுரை

உணவுத் தொழில்நுட்பத்தில் இளங்கலை பயின்ற இவர் வெஜ்ஜி மாமி எனும் ஆன்லைன் காய்கறி வர்த்தகத்தை ஆரம்பித்து சிறப்புடன் நடத்திவருகிறார். கதை, குறும்படம், புகைப்படக்கலை என ஊடகம் சார்ந்து இயக்கிவருகிறார். இவரது அறியாத வயசு குறும்படம் வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. வீடியோ எடிட்டிங்க் துறையிலும் சிறப்புடன் இயங்கி வருகிறார்.

தொடர்புக்கு

Right Fingers Movie Creations
6, Annai Therasa Street,
Kazhipattur,
Kelampakkam (Po),
Chennai - 603 301